விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? – செல்லூர் ராஜூ விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “செங்கோட்டையன் செல்லாத நோட்டு. விஜயை எந்த நாட்டுக்கு முதலமைச்சராக்க போகிறார் செங்கோட்டையன்? ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானாலும் முதல்வர் ஆக்கலாம்.

எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர்., என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது.

ஆதவ் அர்ஜுனா பேச்சை விஜயின் ரசிகர்கள் ரசிக்கலாம், மக்கள் ரசிக்க மாட்டார்கள். கருணாநிதி – ஜெயலலிதா போல ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இடையேதான் போட்டி. சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.