தெற்கு கடலோர ஆந்திரப்பிரதேசத்திற்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழ் நாடு வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால் தமிழ் நாடு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் நாட்டின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




