2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் இன்பதுரை நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையின்போது 300 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டிய அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தபால் ஓட்டுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, அவற்றை மீண்டும் எண்ணவும், கடைசி மூன்று சுற்றுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு அண்மையில் முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2016 இல் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், இன்பதுரையால் அந்த 5 ஆண்டுகளுக்கான எம்எல்ஏ பென்ஷனை கோர முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







