தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







