தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத் தீவு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுமட்டுமன்றி, கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலங்கானா, ராயலசீமா,தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 2) முதல் 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 2) முதல் 7-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




