அடுத்த மூன்று மணி நேரம் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

அடுத்த மூன்று மணி நேரம் எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளத்து

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று(ஜூன்.09) பிற்பகல் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பதை கணித்துள்ளது. இது குறித்த வானிலை அறிக்கையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் 4 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு! - News7 Tamil

அதே போல் தேனி விருதுநகர் தென்காசி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்ந்து வருகிறது. தொடர்ந்து சென்னையின் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.