தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அக்டோபர் 2026 மாதத்தில் கனமழை பெய்தது. ஆனால் நவம்பர் 2026 மாதத்தில் இதுவரை போதுமான மழை பெய்யவில்லை. மாறாக, அதிகாலை வேளைகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பனிபொழிய ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது நிலவுகின்ற வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு நிலவி வருகிறது.
நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை!
அதன்படி, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மன்னார் வளைகுடா முதல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை!
இதன்காரணமாக, இன்று (நவம்பர் 25) இரவு 7 மணி வரை விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 13 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையுடன் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை!
மேலும், செங்கல்பட்டு, சேலம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி மற்றும் ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையுடன் லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




