அஜீத் குமாரின் பைக்குகள் மற்றும் பைக் ரைடுகளின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பு ஒரு முடிவற்ற கதையாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அதன் விளைவாக அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக்கொண்டு எங்காவது பயணம் மேற்க்கெள்வார் அப்படி அவர் செல்லும் பயணங்களில் அவர் ரசிகர்களின் கண்ணில் படவே அவர்களும் அவரின் புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவதும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதும் வழக்கமே. இப்படியிருக்கச் சமீபத்தில் கூட அஜித் ஐரோப்பாவில் ஒரு மாத பைக் பயணம் சென்றார்.
மேலும் கடந்த வருடம் உலக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அப்பயணத்தில் இந்தியாவை உள்ளடக்கிய சில மாநிலங்கள் உள்ளன. அந்த இலக்குகளை முடித்தபின் அஜீத் குமார் அடுத்த ஆண்டு 2023 இல் வெளிநாடு செல்வார்.
இந்நிலையில் அஜீத் குமார் தனது பைக்கர் நண்பர்களுடன் லடாக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சண்டிகர், மணாலி, சர்ச்சு, லே, நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் த்சோ, டிசோ மோரிரி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு, சண்டிகர், ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களை அஜீத் தனது தற்போதைய பயணத்தில் வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.
இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியதும், அஜீத் குமார்ஏகே 61 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இனைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.









