முக்கியச் செய்திகள் தமிழகம்

முக்கிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி அதிமுக, பாமக எம்எல்ஏ-க்கள் ஆட்சியரிடம் மனு

சேலத்தில் அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தொகுதியில்
நிறைவேற்றப்படாத 10 முக்கிய திட்டங்களை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நிறைவேற்றப்படாத 10 முக்கிய திட்டங்கள்
குறித்து அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக
வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்பேரில் சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன்
ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், “சேலம் மாநகரை சுற்றி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அம்மாபேட்டை பிரதான சாலை அல்லது ஆத்தூர் பிரதான சாலையில் இருந்து ஓமலூர் பிரதான சாலையை இணைக்க புறவழி சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இத்திட்டத்தை உடனடியாக செய்து தர வேண்டும். சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில் மேம்பால பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தேவையான உயர் மட்ட பாலங்களை அமைத்து தர வேண்டும். மேலும், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய மேம்பாலம் ஏற்படுத்தி தர வேண்டும்.

இத்துடன் கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி.சித்ரா அளித்த மனு:

ஏற்காடு சேர்வராயன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைத்து, கோயிலை சுற்றி பூங்கா
அமைக்க வேண்டும். ஏற்காடு அண்ணா பூங்கா முதல் மான் பூங்கா வரை ஏரியை கடந்து
செல்லும் வகையில் தொங்கும் பாலம் அமைக்க வேண்டும்.

அறுநூத்துமலை பள்ளிக்காடு முதல்அனுப்பூர் வரை தார் சாலை அமைக்க வேண்டும்.வடக்குநாடு எறும்பூர் செல்லும் வழியில் புதிய பாலம் அமைக்க வேண்டும்.

ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் அளித்த மனு:
ஆத்தூர் சாக்கடை கழிவு நீரை மறுசுழற்சி செய்து, சலவை தொழிலாளர்களின் நலன்
கருதி டோபி கானா அமைத்து, வசிஷ்ட நதியை சுத்தப்படுத்திட வேண்டும். பெரிய
கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சியில் மண்ணூர் சாலை வரை தார் சாலை அமைக்க
வேண்டும். பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் பனைமடல் முதல் தாண்டானூர் வசதிஷ்ட நதி குறுக்கே பாலம் கொடுக்க வேண்டும்.


மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.சதாசிவம் அளித்த மனு விவரம்:

மேச்சேரி ஒன்றியத்தில் புதிய தொழிற்பேட்டை, மேட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரி,
மேட்டூரில் பழுதடைந்துள்ள காவிரி பாலத்திற்கு புதிய பாலம் அமைக்க வேண்டும்.
சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றக் கோரி மனு அளித்தார்.

அதேபோல கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ நல்லதம்பி தனது தொகுதியின்
நிறைவேற்றப்படாத 10 திட்டங்களை நிறைவேற்றக் கோரி மனு அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை – டி.ஆர். பாலு

Jeba Arul Robinson

கருணாநிதி புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கு – செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Editor