முக்கியச் செய்திகள் விளையாட்டு

மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரம் காட்டும் பிசிசிஐ

ஐபிஎல் போலவே 5 அணிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரை 2023 ஆண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆடவர் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டி நடத்த நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் படி ஐபிஎல் போலவே 5 அணிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரை 2023 ஆண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். 20 லீக் போட்டிகள் கொண்ட அத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் வகையில் 20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

லீக் முடிவில் முதல் இடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணியே இறுதி போட்டிக்குள் நுழையும்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சியானது நாளுக்கு நாள், திறன் மிகுந்த வகையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வரும் வேலையில், ஆண்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் லீக் தொடர்கள் போலவே பெண்களுக்கும் தொடர்ந்து தொடர்களை நடத்தி வருகிறது பிசிசிஐ.

சர்வதேச அளவிலான, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உட்பட பல்வேறு அணிகளில் இருந்து பங்கேற்கும் வீராங்கனைகள் கொண்ட 5 அணிகள், அகமதாபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, பஞ்சாப், லக்னோ, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அணிகளாக பெயர் வைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகள் போலவே மகளிருக்கும் லீக் போட்டிகள் நடத்துவதற்கான பிசிசிஐ இன் இந்த அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று!

Jeba Arul Robinson

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்து: ஏ.கே.ராஜன்

Gayathri Venkatesan

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar