#KozhipannaiChelladurai திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அக்.24ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது…

கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் அக்.24ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வரும் அக். 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.