புஷ்பா 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், ‘புஷ்பா’. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான (2021) தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புஷ்பா அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வில்லனாக நடிக்கும் நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்தாண்டு (2024) மார்ச் 22 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.







