தமிழகத்தில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் வரும் 7 ஆம்தேதி வரை 4-ல் இருந்து 6 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமானில் நிலவி வரும் காற்றழுத்த…

தமிழகத்தில் நாளை முதல் வரும் 7 ஆம்தேதி வரை 4-ல் இருந்து 6 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமானில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு, வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், எண்ணூர் மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ‘ தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் வெப்பநிலை அதிகரிகக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்காலில் வருகின்ற 4 ஆம் தேதி 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகரில் வருகின்ற 5 ஆம்தேதி முதல் 7 ஆம் தேதி வரை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

பெரும்பாலன இடங்களில் அனல்காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 3 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இன்று மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மன்னர் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் இடங்களுக்கு செல்லும் போது மின்னவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் எச்சரிக்கை!

அந்தமானில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு, வடகிழக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதால், எண்ணூர் மற்றும் கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.