திமுக சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு

திமுகவின் வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்காக கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாகம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   திமுக-வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தகவல்…

திமுகவின் வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்காக கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாகம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

திமுக-வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட்டு வருகிறது. மேலும் மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட இணையதள பக்கங்களை அதிகமாக பயன்படுத்துதால், தகவல் தொழில் நுட்ப அணி திமுக-வின் செய்திகளை இணையதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வருகிறது. தலைமைக்கும் கடை நிலை நிர்வாகிகளுக்குமிடையேயான நேரடித்தொடர்பை உருவாக்கிடவும், எதிர்கட்சிகளின் குறைகளையும் மக்களிடம் நேரடியாக சென்று சுட்டிக்காட்டி கழகத்தை வலுப்படுத்தி நிலையான மக்களாட்சி தமிழகத்தில் ஏற்படுத்திட வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த அணியினர் செயல்பட்டு வருகின்றனர்.

 

புதிது புதிதாக தகவல் தொழில் நுட்ப முறையில் செயலிகள் உருவாக்கப்பட்டும், திமுக- தொடர்பான செய்திகளை ஐடி-விங்கில் பணியாற்றும் ஊழியர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது திமுக சார்பில் வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

எல்லோரும் நம்முடன் என்ற நோக்கத்திற்காக திமுக- சார்பில் இந்த வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 88388 20608 என்ற எண்ணிற்கு ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பினால் அந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்கான லிங்க் அனுப்பப்படுகிறது. பின்னர் அதனை பயன்படுத்தி அந்த நபர் திமுக வாட்ஸ்-அப் குழுவில் இணைந்து கொள்ளலாம். இந்த குழுவில் தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளை கொண்டு சேர்த்திடும் வகையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்தவும், திமுக இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் இணைய வழியாகவும் செயல்பட குழு தொடங்குவது குறித்து திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.