10-ஆம் வகுப்பில் தேர்ச்சி… யாரும் பேனர் வைக்காததால் தனக்குத் தானே வாழ்த்துக் கூறி பேனர் வைத்த மாணவன்.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா, கொடுமண் பகுதியைச் சார்ந்த ஜிஷ்ணு என்ற மாணவன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளி நிர்வாகம் சார்பாக முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு பிளக்ஸ் போர்டுகளை பள்ளி முன்பு வைகின்றனர். ஆனால், அனைவருக்கும் வைப்பது இல்லை, பாஸ் செய்ய நாங்கள் படும் பாடு எங்களுக்குத்தான் தெரியும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் – சேர்த்தலை நீங்களே செய்யலாம்!’
அடுத்த ஆண்டுக்கான மாணவர்களுக்கான சேர்க்கையை நிரப்பத்தான் அவர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைக்கிறார்கள். எங்களை யாரும் கண்டுகொள்வது இல்லை எனக் கூறும் அந்த மாணவர், தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனக்கு தானே பிளக்ஸ் போர்டு ஒன்றைத் தயார் செய்து சாலையோரம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிஷ்ணு என்ற பத்தாம் வகுப்பு மாணவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.