முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

மே மாதம் 19 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்தது வாட்ஸ்அப்

கடந்த மே மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் 19 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகளை தடை செய்தது.

குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு வழியாகவும், வரம்பு மீறல்களைத் தடுக்க மற்றும் கண்டறிவதற்கான அதன் சொந்த தொழில்நுட்ப வசதி மூலமாகவும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இத்தனை லட்சம் பேரின் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் (50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டவை) ஒவ்வொரு மாதமும் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை அறிக்கைகளாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

சமீபத்திய மாதாந்திர அறிக்கைபடி, மே மாதத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் 19 லட்சம் கணக்குகளைத் தடை செய்தது. பயனர்-பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள்படி நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்தது.

தவறான முறையில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சில நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் வாட்ஸ்அப்பை பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் எங்கள் நிறுவனம் பயன்படுத்துகிறது என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குளையும் வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. 528 புகார்கள் மே மாதத்தில் பெறப்பட்டன. அவற்றில் 303 புகார்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளை தடை செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. அனைத்து புகார்களை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தோம் என்று அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

G SaravanaKumar

குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு

Web Editor

‘தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்கள்; நாட்டுக்குச் செய்யும் துரோகம்’

Arivazhagan Chinnasamy