நடிகர்கள் ஜீவா, ஜெய், ஹீகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து சுந்தர்.c எடுக்கும் காமெடி காதல் படம் தான் ‘காஃபி வித் காதல்’. 90களில் இருந்தே காமெடி தன்னுடைய பல எவர் கிரீன் காமெடி படங்களின் மூலம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் சுந்தர்.c. யார் விட்ட சாபமோ கடந்த சில வருடங்களாக பேய் படங்களாக எடுத்து நம்மை பாடாய் படுத்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பேயை வைத்து காமெடி படம் எடுத்தவர் பின்பு சீரியஸாக எடுக்கிறேன் என காமெடி செய்துகொண்டிருந்தார்.இதற்கிடையில் விஷாலுடன் ‘ஆக்ஷன்’ என்ற தலைப்பிலேயே ஒரு ஆக்ஷன் படத்தை செய்து தியேட்டருக்கு வந்த ஆடியன்ஸை சம்பவம் செய்து அனுப்பினார்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற காமெடி நிறைந்த காதல் படத்தை கையில் எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்திற்காக1990ம் ஆண்டு வெளியான மைக்கேல் மதன காமரஜ் படத்தில் இசைஞானி இளையராஜாவின் ரகளையான இசையில் உருவான ‘ரம்பம் பம் ஆரம்பம்’ பாடல் யுவன் சங்கர் ராஜாவால் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ காட்சிகளை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு காட்சிகளுடன் முழு பாடலை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.
ஏற்கனவே இதே படத்திலிருந்து ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ எனும் பாடலை சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்து கொடுத்திருந்தா யுவன். அந்த பாடல் புதிய தலைமுறை இயக்குநர்களுக்கே கடுமையான tough கொடுக்கும் வகையில் இணையத்தையே கொளுத்தி எடுத்தது. கல்யாணம், காதுகுத்து என எல்லா விழாக்களிலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்திய அதே vibe-உடன் ஒலிக்கத்தொடங்கியது அப்பாடல். இந்நிலையில், ‘ரம்பம் பம்’ பாடலும் இணையத்தில் வைரல் ஆக தொடங்கியுள்ளது







