ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட்டால் என்ன நடக்கும் , அரசியல் வியூகங்கள் எப்படி மாறும் எனபது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டிவிடுவது குறித்து ஓபிஎஸ்-ன் செய்தியாளர் சந்திப்பு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“ஓபிஎஸ் நிதானமாக சிந்தித்துத்தான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரியான முடிவெடுத்துள்ளார். சின்னம் முடக்கம் தொடர்பாக நாங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டோம். இது தொடர்பாக இபிஎஸ் தரப்பு எங்களிடம் பேசினால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். மேலும் களத்திலிருந்து நாங்கள் ஓடி ஒளியவில்லை , களத்தில் போட்டியிட தயாராக இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் ஒரு பிரச்னை இருக்கிறது. ஓபிஎஸ் ம் இபிஎஸ் ம் ஒன்றாக இணைந்து இரட்டைத் தலைமையாக வலம் வந்தபோதும் கூட அவர்கள் தொடர் தோல்விகளைத்தான் சந்தித்து வருகின்றனர். கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட 25% க்கும் குறைவாகத்தான் வாக்குகளை பெற்றனர்.
இப்படி தொடர் தோல்விகளை கட்சி சந்தித்து வரும் நிலையில் இரட்டைத் தலைமையில் இடம்பெற்ற ஒரு தலைமையை , ஜெயலலிதாவால் மூன்று முறை முதலமைச்சராக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரை ஒதுக்கிவிட்டு எப்படி எதிரணியான திமுக அணியை தோற்கடிக்க முடியும் என்பதுதான் ஓபிஎஸ் தரப்பு வாதம்.
இந்த வாதத்தை முறையாக செயல்படுத்தும் விதமாக ஒன்றிணைந்து செயல்பட தயார் என அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்பொழுது தனித்து நின்று திமுக அணியை எதிர்த்து நின்று மீண்டும் தோல்விக்கு கொண்டு செல்வது இபிஎஸ் தான் என்ற கருத்தை முன்வைத்து தங்கள் பலத்தை காட்ட ஓபிஎஸ் தரப்பு தேர்தலில் போட்டியிட தயார் என அறிவித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்று ஓபிஎஸ் கூறியிருப்பதன் மூலம் கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து திமுக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்வோம் எனச் சொன்னதன் மூலம் நீங்களும் பாஜக விற்கு ஆதரவளியுங்கள் என இபிஎஸ் தரப்பிற்கு ஓபிஎஸ் நெருக்கடி கொடுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஐ, இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியது பாஜகவை களத்தில் விடுவதற்கான சதிதான் என்ற உண்மையை ஓபிஎஸ் புரிந்து கொண்டு தேவைப்பட்டால் பாஜக வை ஆதரிக்க நேரிடும் எனச் சொல்வதின் மூலம் இபிஎஸ் – ற்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஓபிஎஸ் கொடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஓபிஎஸ் தமிழக அரசியல் களத்தில் அதிமுக இடத்தில் தனக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு என நிரூபிக்க முயல்கிறார் “ இவ்வாறு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளதன் மூலம் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.