நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. ஜெசிந்தா அர்டெர்னின் பிரதமர் பதவிக்காலம் மீதமுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில்…

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

ஜெசிந்தா அர்டெர்னின் பிரதமர் பதவிக்காலம் மீதமுள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றும் வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் பதவி விலக போவதாகவும் அறிவித்தார்.

வெளிநாடுகளுடன் நல்ல உறவைப் பேணிக்காத்து வந்த ஜெசிந்தா திடீரென ராஜினாமா செய்வதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஜெசிந்தா ஆர்டெர்ன் திறம்பட கையாண்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இடைக்கால பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இந்த பிரதமர் பதவிக்கு போட்டியிட கிறிஸ் ஹிப்கின்ஸ் மட்டும் விருப்ப மனு அளித்ததாகவும் அதன்படி அவர் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

கிறிஸ் ஹிப்கின்ஸ் கோவிட் தடுப்பு பொறுப்பு அமைச்சராக இரு ஆண்டுகள் பணிபுரிந்தவர். கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தியதில் இவர் பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கல்வி அமைச்சர், பொதுச்சேவை அமைச்சராகவும் இருந்துள்ளார். கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு நல்ல அரசியல் அனுபவம் உண்டு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.