தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் எவ்வளவு?

தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில், தமிழக சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால…

தமிழ்நாட்டின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், தமிழக சட்டசபையில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்
காகிதவடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் காதிதமில்லா
திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் முதல் முறையாக, இ- பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.

இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10
மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங் கியதும், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் 1 மணிக்கு அவர் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். மூன்று மணி நேரம் அவர் பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார்.

2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை முடிந்ததும், பேரவை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.