முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு பட்ஜெட்: துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் துறை ரீதியாக நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களையும் வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

➤ தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.

➤ தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.

➤ காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.

➤ தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

➤  நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.

➤ மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.

➤ குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.

➤ நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.

➤ மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.

➤ பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.

➤ உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.

➤ மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.

➤ சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

➤ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.

➤ விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

EZHILARASAN D

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Arivazhagan Chinnasamy

பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்

Gayathri Venkatesan