வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை குறித்த விளக்கத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒருநாள் வட்டி 87.31 கோடி ரூபாய் எனக் கூறியுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால், அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் 6.12 சதவீதம் உள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசிடம் இருந்து 4 சதவீதம் வரிபங்கீடு மட்டுமே கிடைப்பதாகக் கூறிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2021-22-ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி ரூபாய் எனவும் கூறினார்.







