கடல் சீற்றம்: 3,000 ஏக்கர் உப்பளங்கள் பாதிப்பு

மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்திலே இரண்டாம் இடத்தில் உள்ளது மரக்காணம் உப்பு உற்பத்தி…

மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்திலே இரண்டாம் இடத்தில் உள்ளது மரக்காணம் உப்பு உற்பத்தி செய்யும் இடம்
இங்கு ஆண்டு தோறும் சுமார் 10 லட்சம் டன்னுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்து
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் இந்நிலையில்
கடந்த 2 வருடங்களாக கொரோனா பருவமழை போன்ற பாதிப்பால் உப்பு உற்பத்தி மிகவும்
பாதிக்கப்பட்டது.

உப்பு உற்பத்தி நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் தற்பொழுது
உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழலால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்
உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்ய பணி தொடங்கி விறு விறுப்பக நடந்துவந்தது.
உப்பு உற்பத்தியான இந்த சமயத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக மரக்காணம் கடலில்
சீற்றம் அதிகமாக ஏற்பட்டதால் முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகுந்து 3
ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இருந்த உப்பளங்களில் கடல் நீர் சூழ்ந்ததால்
தயார் நிலையில் இருந்த உப்பு உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின இதனால்
உப்பு உற்பத்தியாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இரண்டு வருடம் கழித்து உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்பாக நடந்து வரும்
நிலையில் பருவ நிலைமாற்றம் காரணமாக கடல் நீர் உட்புகுந்து உப்பளங்கள்
தண்ணீரில் மூழ்கியதால் உப்பு உற்பத்தியாளர்கள்ளிடயே மிகுந்த சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.