ஷங்கர் – ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு என்ன ஆச்சு? -லேட்டஸ்ட் அப்டேட்!

ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக நவம்பர் மாதத்துக்குள் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். வாரிசு படத்தை தயாரித்த…

ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக நவம்பர் மாதத்துக்குள் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அரசியல் கதையம்சம் கொண்ட படமாக கேம் சேஞ்சர் திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கதையை தான் ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக நவம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் ஷங்கர். இந்த படம் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் பல கோடி ரூபாய் எகிறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் ஷங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.