பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் உபேரில் 6 ரூபாய்க்கு பயணம் செய்தது தொடர்பான ரசீது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இந்திரா நகர் செல்வதற்காக உபேரில் புக் செய்துள்ளார். அவருக்கு கட்டணமாக 46 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் புரோமோ கோடு அப்ளை செய்தவுடன் அவருக்கு 6 ரூபாய் மட்டுமே கட்டணம் வந்தது. இது தொடர்பான பில்லின் ஸ்கிரீன்ஷாட்டை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏதாவது தவறு நிகழ்ந்திருக்கலாம் என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இறுதியாக உங்களால் முன்பதிவு செய்ய முடிந்ததா?” என மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் நான் பணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக உபேரில் பயணம் மேற்கொண்டேன் என மற்றொருவர் கூறியுள்ளார். உங்களது பயணத்தை ஓட்டுநர்கள் ஏற்றுக் கொண்டு உங்களை அழைத்து சென்றார்களா ஏனெனில் பெரும்பாலான ஓட்டுநர்கள் குறைந்த விலை சவாரி என்றால் கேன்சல் செய்து விடுவார்களே என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.







