மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!

வேப்பூர் அருகே  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சித்தேரி ஊராட்சி உள்ளது இந்த…

வேப்பூர் அருகே  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சித்தேரி ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நீர் வரத்து
வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் 118 பணியாளர்கள் வேலை செய்வதாக வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணி நடைபெறும் இடத்தில் 80-க்கும் மேற்பட்டோர் இல்லாததை கண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணித்தள பொறுப்பாளரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணிகளை கண்காணிக்க வேண்டிய மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.