இத்தாலி தலைநகர் ரோமில் நடந்திருக்கிறது, ஜி20 நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு. கொரோனா கொடும் கரம் நீட்டிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு தலைவர்கள் நேரில் சந்திக்கும் மாநாடு இது. உலக பொருளாதார சக்திகளாக திகழும் 20 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் 16 வது உச்சி மாநாடு, இது. இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
முக்கிய நோக்கங்களில் ஒன்று பருவநிலை மாற்றம்.இந்த மாநாட்டின் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஜி20 அமைப்பு. புவி வெப்பமடை தலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்படிக்கையை பின்பற்ற இந்த மாநாட்டில் உறுதியளித்த தலைவர்கள், கார்பன் சமநிலை என்ற இலக்கை 2025 ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான உறுதியையும் அளித்துள்ளனர்.
நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தவும் இந்த மாநாட்டில் முடிவு செய்யப் பட்டிருக்கிறது. ஆனாலும் உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இலக்கு என இந்த மாநாட்டில் எதையும் அவர்கள் நிர்ணயிக்கவில்லை.
காலநிலை மாற்றங்களுக்கான செலவுகளுக்காக ஏழை நாடுகளுக்கு சுமார் ரூ.7.5 லட்சம் கோடி வரை நிதி திரட்டிக் வழங்க வேண்டும் என்ற கடந்த கால உறுதி வலியுறுத்தப் பட்டிருக்கிறது மீண்டும் . நிலையான மற்றும் நியாயமான சர்வதேச வரி முறையை உருவாக்குவதற்கான முயற்சிக்காக, சர்வதேச நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 15% சதவிகித வரி விதிக்கும் ஓப்பந்ததற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றனர் ஜி20- தலைவர்கள் .
இந்த வருடத்துக்குள், உலக மக்கள் தொகையில் குறைந்தது 40 % பேருக்கும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் 70 % பேருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை ஆதரிப்பதாகவும் உறுதியளித்திருக்கிற, ஜி-20 தலைவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக் கின்றனர்.









