பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள் என்னென்ன? என்கின்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
ஒரு பெண், மற்றொரு உயிரைச் சுமக்கத் தொடங்கிய நாள் முதல் தன்னை தன் கருவுக்காக, பிறக்கப்போகும் குழந்தைக்காகத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருகிறார். அப்படி, தயாராகி வரும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவ காலம் நெருங்க நெருங்க மனதில் ஒரு எதிர்பார்ப்பு கலந்த பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படும் ஒருவகையான அச்சம்தான். இப்படி இருக்க, மனதளவில் தயாராகிக் கொண்டிருக்கும் போதே, பிரசவத்திற்கு தேவையான பொருட்களைத் தயார் செய்வதும் அவசியமாகிறது. கர்ப்ப காலத்தின் ஏழு அல்லது எட்டாம் மாதம் தொடங்கியவுடன் பிரசவத்திற்குச் செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய பையைத் தயார் செய்வது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. அப்படி தயார் செய்ய வேண்டிய பையில் என்னென்ன இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எப்போதும், பிரசவ பையினுள் தாய் மற்றும் சேய்க்குத் தேவையான பொருட்கள் மட்டுமே இருப்பது நல்லது. அதிலும், தாய்க்கு ஒரு பையும், குழந்தைக்கு ஒரு பையும் வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பானது. இந்த பைகளைத் தயார் செய்யும் போது மனைவியும் – கணவரும் சேர்ந்து தயார் செய்வது கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மன ஆறுதலாக இருக்கும். சரி தாய்க்கு என்னவெல்லாம் எடுத்து வைக்க வேண்டும் எனப் பார்க்கலாம். நைட்டி, உள்ளாடைகள், பக்கிள்ஸ் இல்லாத செருப்பு, டி – சர்ட், புத்தகங்கள், இசை கேட்கும் கருவிகள், செல்போன், சார்ஜர், ஹேர் பேன்ட், சாக்ஸ், ஸ்வெட்டர், தலையணை, குளியலறை பொருட்கள் மற்றும் சானிடரி நாப்கின்கள்.
குழந்தைக்காகத் தயார் செய்யும் பையில், மெல்லிய காட்டன் உடைகள், Diapers, சதுர வடிவில் வெட்டிய காட்டன் துணிகள், குழந்தைக்குத் தொப்பி & சாக்ஸ், குழந்தையின் டவல், ஸ்வெட்டர் இருக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்கு மெல்லிய காட்டன் படுக்கை விரிப்புகள், குழந்தையை மூடுவதற்கு பிளாங்கட், குழந்தையைக் குளிப்பாட்டத் தேவையான எண்ணெய், சோப்பு, பவுடர், ஃப்ளாஸ்க், தண்ணீர் பாட்டில் , ஒரு பிளாஸ்டிக் மக், டிஷ்யூ பேப்பர், பாலித்தின் கவர்கள் எடுத்து வைக்க வேண்டும். இவை அனைத்தும் பொதுவாகப் பயன்படும் பொருட்கள். நாம் எந்த மாதிரியான மருத்துவமனைக்கு போகிறோம் என்பதனை கொண்டு இவைகள் மாறுபடலாம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
அண்மைச் செய்தி: ‘யார் இந்த டிடிஎஃப் வாசன்?’
இதுதவிர குழந்தையின் உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் புதியதாகவே இருப்பினும் அவசியம் ஒருமுறையேனும் துவைத்து, வெயிலில் நன்கு உலர்த்திய பின்னரே உபயோகிப்பது அவசியம். தாய் மற்றும் குழந்தைக்கான பொருட்கள் மட்டுமில்லாது வேறு அத்தியாவசிய பொருட்கள் இருப்பின் அவற்றைத் தனி பையில் கொண்டு செல்வது நல்லது.
கர்ப்பகால செய்திகள்:
1. பெண்களின் கர்ப்பம் கண்டறியும் முறை: https://bit.ly/3ya4fk1
2. கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள்: https://bit.ly/3b41R5
3. கர்ப்ப காலத்தின் முக்கிய பரிசோதனைகள்: https://bit.ly/3HDGELq
4. ‘பிக்மி’ எண்ணின் அவசியம் – கர்ப்பிணிகளுக்காக…: https://bit.ly/3N8qCui