இந்தியர்களின் பிரச்னைகளாக இருப்பது என்ன?

கொரோனா தொற்றுதான் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்பது பன்னாட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றானது கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் முதலே இந்திய உள்பட…

கொரோனா தொற்றுதான் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்பது பன்னாட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றானது கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் முதலே இந்திய உள்பட அனைத்து உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. 2 ஆண்டுக்கும் மேல் தொடரும் இந்த கொரோனாவின் பிடியில் இருந்து இன்றளவும் வெளிவர முடியாமல் உலக நாடுகள் சிக்கித் தவித்து வருகிறது. இந்த வரிசையில் இந்தியாவும் அதிகப்படியான மக்கள் தொகையுடன் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வந்தது. கொரோனாவின் இரண்டு அலைகள் வீசி முடிந்துள்ளதை தொடர்ந்து 2021ம் ஆண்டில் இறுதியில் கொரோனா மீண்டும் உச்சமடையத் தொடங்கியது. இது தொடர்ந்து தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

பன்னாட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனம் இப்சோஸ் நடத்திய ஆய்வின் மூலம் பெரும்பாலான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த ஆராய்ச்சியில் 43 சதவீதமானவர்கள் கொரோனா தொற்று கவலை அளிப்பதாகவும், 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை கவலையளிப்பதாகவும் மற்றும் 28 சதவீதம் பேர் பொருளாதார மற்றும் ஊழல் கவலையளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய இப்சோஸ் நிறுவனத்தின் சிஇஒ அமித் ஆதார்கர், “கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்துவந்தாலும், கொரோனா தொற்றுடனும், வேலைவாய்ப்பையும் தேடுவதில் சாமானியர்கள் இருக்கிறார்கள். வைரஸ் தாக்கம் இன்னும் முடியாததால் மக்களிடன் கவலையே நீடிக்கிறது. இருந்தாலும் கொரோனாவை நாம் எதிர்கொள்ள வேண்டும். தேர்தல் மற்றும் பெரும் நிகழ்ச்சிகள் கொரோனா பரவ காரணமாக இருக்கிறது. இந்த நேரங்களில் மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வில், சர்வதேச அளவில் 31 சதவீதமானவர்கள் கொரோனா தொற்றே தங்களது பிரச்னையாக உள்ளதெனவும், 31 சதவீதமானவர்கள் ஏழ்மை மற்றும் சமூக சமத்துவமின்மை கவலையளிப்பதாகவும், 29 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் குறிப்பாக இந்தியர்கள் 43 சதவீதமானவர்கள் கொரோனா தொற்று கவலை அளிப்பதாகவும், 40 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை கவலையளிப்பதாகவும் மற்றும் 28 சதவீதம் பேர் பொருளாதார மற்றும் ஊழல் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா கொரோனாவில் இருந்து மீளத் தொடங்கியுள்ளது, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இந்த நிலை சிறந்த எதிர்காலத்தின் தொடக்காம உள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.