முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு, அதிமுகவை முடக்க முடியாது என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விழுப்புரத்தையடுத்த பனையபுரத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்று பேசிய முன்னாள் சட்டத்துறைஅமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக எதிர்கட்சியாக அமரும் போதெல்லாம், முன்பை காட்டிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்கி விடலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கனவு காண்பதாகவும், அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.
மேலும், சிறைக்குப்செல்வது எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல எனவும் மக்கள் திமுகவிற்கு நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளதால் அதனை பயன்படுத்தி மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என பாருங்கள் எனவும், அதிமுகவினர் மீது வழக்குகள் போட போட நாங்கள் வளர்ந்து வருவோம் எனவும் தெரிவித்தார்.








