வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் பாடங்களை நீக்கியதைக் கண்டித்து மணல்மேடு அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடங்களை நீக்கியத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ தலமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தை நீக்கி மத்திய அரசு வரலாற்றை இருட்டடிப்பு செய்துள்ளதாகவும், மற்றும் நயவஞ்ச நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
—கோ. சிவசங்கரன்







