நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குமரிக்கடல் பகுதியில், நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மேற்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம், தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.