டெல்லியில் பிரதமர் மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்றப் பிறகு முதல்முறையாக டெல்லிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரமருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.







