”இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்”- மமதா பானர்ஜி!

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. அம்மாநில முதல்வர்…

இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பு மட்டும் அவரை நினைக்காமல், 365 நாட்களும் நினைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என்றும் மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவில் இருந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்ததாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு தலைநகரம் இருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply