சசிகலாவை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் முதற்கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இந்த நிலையில் இளவரசி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அவருக்கு ஆர்டி பிசி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இளவரசியை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என இளவரசி தரப்பில் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







