ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் உட் கட்டமைப்பபு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஆயிரம் பேருக்கு, ரூ.23.28 கோடி செலவில் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 90 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என்றும், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.
வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்தார்.