முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டார். அதன்படி, 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என அப்போது அவர் கூறினார்.

14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ப்பு மேம்பாட்டு கழகம் மூலம் தனித் திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.37 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும். சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.

அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படும் என்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்  அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா!

Gayathri Venkatesan

அளவுக்கு அதிகமானால் அழுகையும் நஞ்சு; திருமணத்தன்று பரிதாபமாக உயிரிழந்த மணமகள்

Saravana Kumar

கேரள முதலமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல் – செல்போன் திருடன் கைது

Halley karthi