இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்க வைத்தது. இப்போடியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், மற்றும் இளம் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் நடராஜனுக்கு நேற்று சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இன்று அதிகாலை சென்னை வந்த வாஷிங்டன் சுந்தருக்கு அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாடல்கள் பாடி நடனமாடி கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.