சசிகலா விடுதலையால் அதிமுக கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டவுள்ள பொறுப்பாளர்கள் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படை தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் இதற்கு மத்திய அரசு முடிவுகட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது இருக்கக்கூடிய கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று கூறிய ஜி.கே.வாசன், இனி இதில் எந்த மாற்றமும் வராது என்று அவர் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வரும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இல்லை என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்