ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில்…

Weedy New Year | Devotees gathered in Tiruvannamalai temple!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் புத்தாண்டில் அண்ணாமலையாரை வழிபட்டது மனதுக்கு நிறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.