ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த திருமணப் பரிசு! என்ன தெரியுமா?

ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த திருமணப் பரிசு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.  கடந்த சில நாட்களாகவே பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாக இருப்பது அம்பானி இல்லத் திருமணம். அப்படிப்பட்ட ஆனந்த் அம்பானி –…

ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் அளித்த திருமணப் பரிசு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். 

கடந்த சில நாட்களாகவே பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாக இருப்பது அம்பானி இல்லத் திருமணம். அப்படிப்பட்ட ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் நாளை மும்பையில் நடைபெற உள்ளது. இதற்காக பல ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் அம்பானி குடும்பத்தினர். முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. இந்த வார தொடக்கத்தில் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது.

 

இந்த கொண்டாட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலங்களின் ஆடைகள், புகைப்படங்கள் என அவ்வப்போது ஏதேனும் ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில் திருமணத்தையொட்டி ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கிப்ஸ் பாக்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது. தங்களுக்கு வழங்கப்பட்ட பாக்ஸில் உள்ள பொருட்களை ஊழியர்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் இனிப்புகள், மிக்சர் வகைகள், வெள்ளி நாணயம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவானது தற்பொது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.