‘6பி’ படிவத்தைப் பூர்த்தி செய்தால் போதும் ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைத்துவிடலாம்!

இந்தியாவில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய…

இந்தியாவில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட நிலையில், ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக வாக்காளர் அடையாள அட்டை விளங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்த இடத்திலிருந்தாலும் இந்த வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்களிப்பது இந்தியாவில் உள்ள அனைவரின் முக்கிய கடமையாகும். இந்த நிலையில் ஆதார் அட்டையைப் பயன்படுத்திப் பல மோசடிகள் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.

இதன் காரணமாக ஆதாருடன் தொலைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும் வங்கிக் கணக்கு, பான்கார்டு எண் போன்றவற்றுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘திருமண நாள்; மனைவியுடன் திருப்பதியில் தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்’

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணியில் 6பி என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக 6பி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டையின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இந்த பணியினை தேசிய வாக்காளர் சேவை அமைப்பான என்விஎஸ்பி போர்ட்டல், வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.