அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்…

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து புயலாக மாறும் என்றும்,  இந்தப் புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயர் சூட்டப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் – சமூக வளைத்தளத்தில் வைரல்!

அதனை தொடர்ந்து,  காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.