டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் மட்டுமே எங்கள் நிறுவனத்தின் கார்களை அந்நாட்டில் தயாரிப்போம் என்று அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் உற்பத்தி மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக என்று டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் எலான் மஸ்கை டேக் செய்து கேள்வி கேட்டிருந்தார்.
அவரது கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்தார். அந்தப் பதிவில், “எந்தவொரு இடத்திலும் இந்தியாவில் உற்பத்தி மையத்தை டெஸ்லா நிறுவனம் தொடங்கவில்லை. முதலில் நாங்கள் எங்களது கார்களை விற்பனை செய்வதற்கும், சர்வீஸ் செய்வதற்கு அனுமதி கிடைக்க வேண்டும். இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் பிரச்னை ஒன்றும் இல்லை. ஆனால், அந்நிறுவனம் சீனாவில் இருந்து கார்களை இறக்குமதி செய்யக் கூடாது” என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
எனினும், கார்கள் இறக்குமதிக்கான வரிகள் உலகில் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதை குறைக்குமாறு எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 லட்சம் மதிப்பிலான கார்களை முழுமையாக இறக்குமதி செய்ய 100 சதவீத இறக்குமதி வரியை தற்போது மத்திய அரசு விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.