எம்.பி பதவியை ராஜினாமா செய்வோம்: திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பிறகு, நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு…

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பிறகு, நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என கூறி தீர்ப்பளித்ததோடு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரகுல்கந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் சிதம்பரம் மற்றும் திருநாவுக்கரசு ஆகியார் தலைமையில் அறவழி போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்ட மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்வது மட்டுமே ஜனநாயகம் கிடையாது. ஹிட்லர் கூட வாக்கெடுப்பு முறையில் அதிபர் ஆனார்.

ரஷிய தலைவர் புடின் வாக்கெடுப்பு முறையில் அதிபர் ஆனார். அவர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள். எனவே ஓட்டு செலுத்தி வெற்றிபெற செய்தால் ஜனநாயகம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் பொழுது ராகுல் காந்தி பேசியது குறித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், ராகுல் காந்தி விமர்சித்த அந்த பெயர்களை சொன்னால் என் மீதும் வழக்கு போடுவார்கள். எனக்காக சத்தியாகிரகம் பண்ண யாருமே வர மாட்டீர்கள். மோடி என்பது சமுதாய பெயர் என்பது எனக்கு தெரியாது. ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியது வழக்கு தொடர்ந்தவருக்கு புரிந்ததா என்பது கூட தெரியவில்லை.

5 நிமிடம் பேசியதற்காக 120 பக்க தீர்ப்பினை, சூரத் நீதிமன்றம் குஜராத்தி மொழியில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வந்ததும் எல்லோருக்கும் தெரியும், அடுத்தது தகுதி நீக்கம் தான் என்று.ராகுல் காந்தியை வீட்டை காலி செய்யவேண்டும் என அறிவுறுத்துவார்கள். கர்நாடக மாநில தேர்தல் அறிவிப்பின் போது வயநடு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கார்த்திக் சிதம்பரத்தை தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு, கள்ளம் கபடம் இல்லாத நபராக ராகுல் காந்தி உள்ளார். அதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. ராகுல் காந்தி பேசும் போது மோடி அடிக்கடி தண்ணீர் குடித்தார். அவரது கைகள் நடுங்கியது. பொது கூட்டத்தில் பேசியதற்காக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இது தான் முதல் முறை. பொது மேடையில் பேசியதற்கு மான நாஷ்ட வழக்கு தொடுத்து தண்டனை கொடுத்தால் யாரும் பொது மேடையில் பேச முடியாது. இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்றார்.

மேலும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும். இதுபோன்ற ஜனநாயக விரோதத்தை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஒருநாள் சத்யாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாம் இந்தியா முழுவதும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அமைதியாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் அதுக்கே பாவம் என்று கூறுகிறார்கள். அகிம்சை போராட்டத்திற்கு தடைவிதிக்கவேண்டிய அவசியம் என்ன? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாட்டில் இது போன்று செய்யக்கூடாது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் எனவும் திருநாவுக்கரசு குற்றம் சாட்டினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.