காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறுத்தப்படாது என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். தொடர்ந்து கேரளா, கர்நாடாக, ஆந்திரபிரதேசம், என தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட அவர், தற்போது அரியானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா தற்போது அதிகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு வழிகாட்டு முறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்ட இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றபட வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தியவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் தேச நலனை கருத்தில் கொண்டு நடைபயணத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பதிலளித்துள்ளார். அதில், கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் காங்கிரஸ் பின்பற்றும். ஆனால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் ஒரு போதும் நிறுத்தப்படாது என்றும், ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும், தனிமனிதனுக்கும் தங்கள் கருத்தை பேச உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.