முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி வாகனத்தில் சென்றபடி, உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, இருங்காட்டுக் கோட்டை தொழிற்சாலையில், ஹூண்டாய் நிறுவனம் 1 கோடி கார்களை தயாரித்ததற்கான சாதனை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த ஒருகோடியாவது காரை பார்வையிட்ட அவர், காரில் வாழ்த்துக்கள் என கையெழுத்திட்டு, அதனை விற்பனைக்காக அனுப்பிவைத்தார்.

இதையடுத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை ஒரு கோடி காரை உற்பத்தி செய்து சாதனை படைத்திருப்பதாக குறிப்பிட்டார். தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

காவிரி: தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

Vandhana

கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம்: முதல்வர்!

ஊழல் புகார்; திமுக விடுத்துள்ள சவாலை சந்திக்க அதிமுக தயார், அமைச்சர் செங்கோட்டையன்!

Saravana