முக்கியச் செய்திகள் குற்றம்

குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்தில் நீக்க வேண்டும்: டிவிட்டருக்கு பெண்கள் ஆணையம் உத்தரவு

குழந்தைகள் ஆபாசப் படங்களை ஒருவாரத்துக்குள் நீக்கும்படி டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு இந்திய பெண்கள் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிவிட்டர் பதிவில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நேற்று(ஜூன்29) அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார், டிவிட்டர் இந்தியா மற்றும் டிவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. குழந்தைகள் ஆணையம் சமர்பித்த டிவிட்டர் பக்கங்கள், டிவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“டிவிட்டரில் பல்வேறு ஆபாசப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், டிவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள குழந்தைகள் ஆபாசப்படங்கள், ஆட்சேபனைக்குரிய பதிவுகளை ஒருவாரத்துக்குள் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தவிர டெல்லி காவல்துறை ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

இது போன்று இதற்கு முன்பே டிவிட்டர் தளத்தின் மீது புகார் எழுந்தபோது, அந்த நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆபாசபடங்கள் இந்திய சட்டத்துக்கு எதிரானவை. அது மட்டுமின்றி டிவிட்டரின் கொள்கைக்கும் இது எதிரானதுதான். அதனை அகற்றுவதற்கு இது நாள்வரை டிவிட்டர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆபாசப்படங்கள் கொண்ட சில டிவிட்டர் புரஃபைல்களை டிவிட்டர் நிறுவனத்துக்கு பகிர்ந்திருக்கின்றோம். இந்த படங்களை எல்லாம் ஒருவாரத்துக்குள் நீக்க வேண்டும். அதுகுறித்து பத்து நாட்களுக்குள் தேசிய பெண்கள் ஆணையத்துக்கு பதில் அளிக்க வேண்டும்.”
இவ்வாறு தேசிய பெண்கள் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

Jeba Arul Robinson

வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; அமெரிக்க முதல் பெண் மெலனியா ட்ரம்ப் கருத்து!

Saravana

பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Jayapriya