முக்கியச் செய்திகள் இந்தியா

2024-இல் மத்தியில் ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலகளுக்கு சிறப்பு அந்தஸ்து-நிதிஷ் குமார்

2024 பொதுத் தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

நிதிஷ் குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2024இல் ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். நான் பீகாரைப் பற்றி மட்டும் பேசவில்லை. சிறப்பு அந்தஸ்து பெற வேண்டிய மற்ற மாநிலங்களைப் பற்றியும் பேசுகிறேன் என்றார் நிதிஷ் குமார்.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது.

கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான மத்திய-மாநில நிதி விகிதம் 90:10 ஆகும், இது மற்ற மாநிலங்களுக்கான விகிதத்தை விட மிகவும் சாதகமானது.

தற்போதைய நிலையில், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் உள்பட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பத்ம விருது பெற்ற இரு தோல் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை

Web Editor

மர வியாபாரி வீட்டில் 70 சவரண் நகை கொள்ளை

Halley Karthik

ஆடர் செய்தது ஐஸ்கிரீம்; வீட்டிற்கு வந்தது என்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy