புதுச்சேரி அரசுக்கு விசிக எம்பி கோரிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை விசிக எம்பி ரவிக்குமார் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். கர்நாடக…

மேகதாது அணை விவகாரத்தில் புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை விசிக எம்பி ரவிக்குமார் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மேகதாதுவில் அணை கட்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு, நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவேரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காவேரியில் இருந்து 7 டிஎம்சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் புதுச்சேரிக்கு ஒதுக்கியது. அந்த தண்ணீரை தமிழ்நாடு வாயிலாக தான் புதுச்சேரி பெற முடியும். அந்த தண்ணீர் கிடைக்காமல் போனால் புதுச்சேரியில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிந்து விடும். எனவே புதுச்சேரி அரசும் தமிழ் நாட்டை போல ஒன்றிய அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டில் கூட்டப்பட்டது போல புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன், அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.